search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார தட்டுப்பாடு"

    • 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்ய நடவடிக்கை.
    • அரசியல்வாதிகள் இந்த மாற்றங்களை முதலில் ஏற்று கொள்ள அமைச்சர் வலியுறுத்தல்.

    இஸ்லாமாபாத்:

    கடும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் தவித்து வருகிறது. தற்போது புதிதாக மின்சார உற்பத்தி பாதிப்பு பிரச்சினையும் தலைதூக்கி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நீடித்து வரும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக பாகிஸ்தான் எரிசக்திதுறை அதிக நெருக்கடியை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேசிய எரிசக்தி பாதுகாப்பு திட்டத்தை பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அண்மையில் அறிவித்தார். இது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளதாவது:  


    புதிய திட்டத்தின் அடிப்படையில் பாகிஸ்தானில் உள்ள சந்தைகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் இரவு 8 மணிக்குள் அடைக்கப்பட வேண்டும், திருமண மண்டபங்கள் இரவு 10 மணி வரை செயல்படலாம். 20 சதவீத அரசு பணியாளர்கள் வீட்டிலிருந்து சுழற்சி முறையில் வேலை செய்தால், ரூ.62 பில்லியன் வரை சேமிக்க முடியும், ஆற்றல் திறன் கொண்ட மின்விசிறிகள் மற்றும் பல்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.

    பெட்ரோல் நுகர்வைக் குறைக்க பாரம்பரிய மோட்டார் சைக்கிள்களுக்குப் பதிலாக மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக மின்சார பைக்குகள் இறக்குமதி தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதுள்ள மோட்டார் சைக்கிள்களை மாற்றியமைக்க உற்பத்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

    நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், அன்றாட நடைமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும். விரயம் செய்யும் கலாச்சாரத்தை இனி எங்களால் தாங்க முடியாது, அரசியல்வாதிகள் இந்த மாற்றங்களை முதலில் ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். நாடு தழுவிய அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசு மாகாணங்களை அணுகும், வியாழக்கிழமைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    • தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாடு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மின்சார பற்றாக்குறை கடுமையாக உள்ளது. இதனால் மின்சாரத்தை சேமிக்கவும், அதன் பயன்பாட்டை குறைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தானில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் இஸ்லாமாபாத்தில் இரவு 10 மணிக்கு மேல் திருமண நிகழ்ச்சிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நாடு முழுவதும் இரவு 8.30 மணிக்கு அனைத்து மார்க்கெட்டுகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் அனைத்து மாகாண முதல்-மந்திரிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த தடை உத்தரவுகளை கடுமையாக அமல்படுத்த இஸ்லாமாபாத் போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் இஸ்லாமாபாத்தில் நடக்கும் திருமண விழாக்களில் ஒரே ஒரு உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால் 22 ஆயிரம் மெகாவாட் மின்சாரமே தயாரிக்கப்படுகிறது.

    4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. வரும் நாட்களில் மின்சாரம் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

    தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. #PowerShortage #TNGovernment
    சென்னை:

    தமிழ்நாட்டில் தற்போது மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இது அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று எதிர்க்கட்சியான தி.மு.க. குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

    மத்திய அரசு வழக்கத்தை விட 60 சதவீதம் நிலக்கரி குறைவாக வழங்குகிறது. அதே நேரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் எதிர்பாராத வகையில் மிகவும் குறைந்து விட்டது. உற்பத்தி திறன் 1.2 சதவீதமாக குறைந்து விட்டது.

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிலையங்களில் கடந்த 13-ந்தேதி (நேற்று முன்தினம்) 13,751 மெகாவாட்டும், நேற்று 13,924 மெகாவாட்டும் மின் சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் நாள் ஒன்றுக்கு 18,204 மெகாவாட் மின்சாரம் தேவை.



    வழக்கமாக காற்றாலை மூலம் 8,255 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார அளவு மிகவும் குறைந்து விட்டது. அதாவது 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.

    அனல்மின் நிலையங்களுக்கு தினமும் 20 ரெயில் பெட்டிகள் அளவு நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் 7 முதல் 8 ரெயில் பெட்டிகள் நிலக்கரி மட்டுமே சப்ளை செய்யப்படுகிறது.

    இதனால் மின்உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 2,510 மெகாவாட்டும், நேற்று 2,875 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது. அதற்கு முன் தினசரி 4,320 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

    இத்தகைய காரணங்களால் தான் மின் உற்பத்தி பாதிப்பால் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.

    தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து உற்பத்தி நடப்பதற்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. எனவே தமிழக மின் உற்பத்திக்கு தேவையான தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை சப்ளை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    எதிர்காலத்தில் இத்தகைய மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க நிலக்கரி அதிக அளவில் தேவைப்படுகிறது. எனவே 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

    இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழ்நாடு மின் வாரியத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே தமிழ்நாட்டில், மின் தட்டுப்பாடுக்கான காரணம் பற்றி கேட்டதற்கு மின்துறை அமைச்சர் பி.தங்க மணி பதில் அளித்தார்.

    அதில், “கடந்த 10 மற்றும் 11-ந்தேதிகளில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. ஆண்டு பராமரிப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் மற்றும் வல்லூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதுதான். இது முன் எப்போதும் இல்லாத அளவு எதிர்பாராமல் நடந்தது. நிலைமை 3 நாளில் சீராகும் என தெரிவித்தார். #PowerShortage #TNGovernment
    ×